• GATS 2026 பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்

    Reflections Event Space Cumming, GA, United States

    GATS 2026 பொங்கல் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக உலகத் தமிழர்களிடையே பெரும் புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர்களான திருமிகு ராஜா மற்றும் திருமிகு பாரதி பாஸ்கர் வந்துள்ளார்கள், அவர்களோடு நமது உள்ளூர் பேச்சாளர்களும் இணையும் பட்டிமன்றத்தைக் காண வாருங்கள்!

  • GATS பொங்கல் 2026 | GATS 2026 Pongal Celebrations

    North Gwinnett High School 20 Level Creek Rd, Suwanee, GA, United States

    “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி“ தமிழனின் வரலாறு நீண்ட நெடியது! இன்னும் பல்லாயிரம் ஆண்டுகாலத்திற்கு பின்னரும் தமிழன் நமது பண்பாட்டையும் மரபையும் அண்டமெங்கும் கொண்டு செல்வான்! அதற்காகத்தான் தமிழ்ச்சங்கங்கள் நாம் இன்று வித்திட்டு கொண்டிருக்கிறோம். ஒரு மொழி வாழ்ந்தால், அந்த இனம் வாழும்! வருகிற பிப்ரவரி 14 ஆம் நாள் நமது மரபைப் போற்றும் பொங்கல் விழாவை எங்களுடன் கொண்டாட வாருங்கள்! !!

  • GATS தங்கத் தாரகை 2026 | WOW 2026

    Reflections Event Space Cumming, GA, United States

    அட்லாண்டா மகளிர் அனைவரும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தோடு கொண்டாட நாளை (மார்ச் 8, ஞாயிறு, 3:30 PM to 8.30 PM) Reflections Event Space, Cumming-இல் நடைபெறவுள்ள தங்கத் தாரகை 2026 (GATS WOW 2026) நிகழ்ச்சிக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம்!

  • GATS சித்திரைத் திருவிழா 2026

    Gujarati Samaj 5331 Royal Woods Pkwy, Tucker

    அனைவருக்கும் வணக்கம் , அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2026ஆம் ஆண்டின் சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 26ஆம் நாள் குஜராத்தி சமாஜில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சித்திரைத் திருவிழா சிறப்புப் போட்டிகள், GATS இளைஞர் இசைக் குழு, நடனக் குழு , இசை மழை , இலக்கியக் குழுவின் "வள்ளுவம் தந்த வழி" என்ற சிறப்பு நாடகம், குழு நடனங்கள், லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி அவர்கள் இசையமைத்து வெளியிட்டு வரும் குறளிசைக் காவியத்தின் இசைத்தட்டு...