அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் மறக்கவியலாத, மகிழ்ச்சி மிகுந்த தீபாவளியைக் கொண்டாட உங்களை அழைக்கிறது, வரும் நவம்பர் 19 ஆம் நாள் டுலுத் உயர்நிலை பள்ளிக்கு மறக்காமல் வந்துவிடுங்கள்!

இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டம் அட்லாண்டாவின் புகழ் பெற்ற ஒரு இந்திய உணவகத்திலிருந்து சுவையான பகலுணவுடன் தொடங்குகிறது. நிகழ்ச்சி நாள் அன்று நேரிலேயே உங்களுக்கான பகலுணவை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளலாம்.

அதன் பிறகு உங்களுக்காக உள்ளம் கவரும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் புகழ் பெற்ற பாடகர் திருமிகு சத்யன் மஹாலிங்கம் நடத்தும் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி காத்துக் கொண்டுள்ளது.

தீபாவளிக் கொண்டாட்டம் இரவு உணவு இல்லாமலா? நாவூறும் இரவு உணவுடன் நிறைவடையப் போகிறது நமது கொண்டாட்டம். நீங்கள் தமிழ்ச் சங்க உறுப்பினராக இல்லையென்றால் மட்டுமே உணவுக் கட்டணம் செலுத்த வேண்டும். உறுப்பினர்கள் குடும்பத்திற்கு எந்தவித கட்டணமும் தேவையில்லை.

ஆம், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், கீழ்கண்ட படிவத்தில் உங்கள் உறுப்பினர் மின்னஞ்சலை பயன்படுத்தி உங்களுக்கான இரவு உணவை பதிவு செய்து கொள்ளுங்கள். நம் தமிழ்ச்சங்கத்தோடு இணைந்திருக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!

GATS is looking forward to seeing you all at the Deepavali Celebrations on 11/19 (Saturday) at Duluth High School, Duluth. The celebration starts with a tasty lunch at 11.30 AM from one of Atlanta’s famous Indian restaurants. You can choose from the available options and purchase lunch on the spot at the venue.

Following that will be a fun-filled celebration with a variety of events, including cultural programs from local talents and a Musical event – Soundilicious by famous singer Mr. Sathyan Mahalingam.

The Deepavali celebrations with the Tamil community will end with a delicious dinner. If you are a GATS member, the dinner is on us.

Yes, this year GATS is happy to announce that, we will be serving a Complimentary dinner for all the members and their family who have pre-registered using the form below.

We would like to thank all the members for staying connected with our Tamil Sangam.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

  1. உங்களுக்கான இலவச உணவைப் பதிவு செய்து கொள்ள நீங்கள் இந்த படிவத்தை நிரப்பும் முன்னரே உறுப்பினராக இருக்க வேண்டும்
  2. உங்கள் உணவுப் பதிவு தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சரி பார்ப்புக்கு உட்பட்டது
  3. உறுப்பினர் அல்லாதவர்கள் பின்வரும் இணைப்பைச் சொடுக்கி https://members.gatamilsangam.org/newmember/register, உங்களை உறுப்பினராக பதிந்து உறுதி செய்த பிறகு உணவு படிவத்தை நிரப்பவும்
  4. குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகஅளவு 4 கட்டணம் அல்லாத உணவுப் பதிவுகளே அனுமதிக்கப்படும்
  5. கட்டணம் இல்லாத உணவு முதலில் பதியும் 500 உறுப்பினர்களுக்கு மட்டுமே. 500க்கும் மேற்பட்ட பதிவுகள் பெறப்படுமாயின், உறுப்பினர்களுக்கான கட்டணம் அல்லாத முன்பதிவை 11/17இற்கு முன்பே முடித்து வைக்க தமிழ்ச் சங்கத்திற்கு உரிமை உண்டு
    • * உறுப்பினர்கள் – அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்கள் மற்றும் 2022ஆம் ஆண்டு உறுப்பினர்களாக பதிவு செய்தவர்கள்

Terms and Conditions:

  1. To avail the complimentary dinner offer, one must be a registered member before registering for food using the form below
  2. Registrations are subject to be confirmed upon verification of membership by GATS team
  3. Non-members can become GATS members using the following link https://members.gatamilsangam.org/newmember/register and upon receipt of membership can register here for the dinner
  4. Maximum of 4 complimentary dinner registrations are allowed for a family membership.
  5. Complimentary dinner is only for the first 500 member registrations. GATS reserves the right to close the registration for complimentary dinner earlier than 11/17, if we receive the 500 member count.
    • * member registrations = Lifetime members, and already registered members for the year 2022.

குறிப்பு:

  • கீழ்கண்ட படிவத்தில் உங்கள் விவரங்கள் மற்றும் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான உணவு எண்ணிக்கையை (சைவம் அல்லது அசைவம்) தேர்ந்தெடுத்து, இரவு உணவை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்


Note:

  • Kindly pre-register for dinner using the form below. Please note that you will need to explicitly select the number of meals (veg or non-veg) for adults and kids in the respective drop downs.