GATS 2024 Deepavali
தீபாவளிக் கொண்டாட்டம் 2024
2024 ஆம் ஆண்டின் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்க தீபாவளி கொண்டாட்டம் ஒரு பெரிய விழாவாக மகிழ்ச்சி, இசை, மற்றும் கலை நிகழ்ச்சிகளால் நிறைந்திருக்க இருக்கிறது! இந்த நிகழ்ச்சி அக்டோபர் 27, 2024 (ஞாயிற்றுக்கிழமை), டுலூத் உயர்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி சிறப்பம்சங்கள்:
மண் மணம் மாறா மக்களிசை விழா: பிரபல நாட்டுப்புறப் பாடகர்கள் மக்களிசை மன்னன் Dr. C. செந்தில் கணேஷ், மக்கள் செல்வி J. ராஜலெட்சுமி மற்றும் குழுவினர் தங்கள் இனிமையான இசையால் அனைவரையும் மயக்கவுள்ளனர். அவர்களின் உற்சாகமான கலைநிகழ்ச்சிகள் தமிழர்களின் மண் மணம் மாறா மக்களிசையை நமக்கு வழங்கி மகிழ்வடையச் செய்யும். இந்த சிறப்பு விருந்தினர்கள் மகிழ்ச்சியான பாடல்களால் அனைவரையும் உற்சாகமடைய வைப்பார்கள்!
கலை நிகழ்ச்சிகள்: நம் உறுப்பினர்களில் உள்ள உள்ளூர் திறமையாளர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள்.
துணைக்குழு அறிவிப்புகள்: அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்க துணைக்குழுக்களின் முக்கிய அறிவிப்புகள் நிகழ்வில் பகிரப்படும்.
இனிப்புகள்: அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு இனிப்புகள் இலவசமாக வழங்கப்படும். உணவுக்கான முன்பதிவு விரைவில் வெளியிடப்படும். நிகழ்ச்சியின் போது தின்பண்டங்கள் விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டுமலர் வெளியீடு: 2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டுமலர் சிறப்பாக வெளியிடப்படவுள்ளது.
நிகழ்வுக்கான நுழைவுக் கட்டணம்: உறுப்பினர்களுக்கு நுழைவு இலவசம். உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு, ஒரு நபருக்கு $50 நுழைவுக் கட்டணம் விதிக்கப்படும்.
இம்முறை தீபாவளியை உற்சாகமான நெகிழ்ச்சியூட்டும் கொண்டாட்டமாக நாம் கொண்டாடுவோம்! இசை, கலாச்சாரம் மற்றும் மகிழ்ச்சியுடன் இந்த தீபாவளியை மறக்கமுடியாத ஒன்றாக்குவோம்!
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், contact@gatamilsangam.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
GATS Deepavali Kondattam 2024
We are thrilled to invite you to the GATS Deepavali Kondattam 2024, a grand celebration filled with vibrant folk music, cultural performances, and delicious food and sweets. This exciting event will take place on October 27, 2024 (Sunday) at Duluth High School (3737 Brock Rd NW, Duluth, GA 30096).
Event Highlights:
Folk Music Extravaganza: We are honored to have Dr. C. Senthil Ganesh and Mrs. J. Rajalakshmi, renowned folk singers and stars, who will mesmerize us with their soulful folk tunes. Their energetic performances will bring an authentic taste of Tamil people’s rich musical heritage. Our celebrity guests will entertain the audience with their lively music and songs, and there will be plenty of opportunities for everyone to enjoy, making it a truly joyous celebration!
Cultural Performances: Talented local members of the general body will showcase their skills in a variety of cultural performances.
GATS Subcommittee Updates: Important updates from the GATS subcommittee will be shared during the event.
Lunch, Sweets & Snacks: Paid members of GATS will receive complimentary sweets boxes. Food registration will open soon, so please register for food. We will also arrange light snacks and tea for purchase during the event.
2023 Annual Magazine Release: The much-awaited 2023 Annual Magazine will be officially released as part of the celebration.
Event Entry Fee: The event is free for active GATS members. For non-members, there is a $50 per person entry fee.
We are planning to make this a truly explosive celebration! Come be part of this sparkling and joyful Deepavali Kondattam. With fun, music, and celebrations, let’s make this Deepavali one to remember!
If you have any questions, please email us at contact@gatamilsangam.org.






