GATS 2025 Chithirai Thiruvizha – Competition Rules
சித்திரை திருவிழாப் போட்டி விதிமுறைகள்
GATS 2025 Chithirai Thiruvizha General Rules and Disclaimer
General Rules and Regulations
- Only GATS members are eligible to participate in the competitions.
- For on-premise competitions, participants must arrive at least 30 minutes prior to the start of their competition to allow time for setup and preparation. Late arrivals will not be permitted to participate.
- Each participant is allowed to register for a maximum of two competitions.If a participant submits entries for more than two competitions through multiple forms or other methods, the GATS team reserves the right to randomly select any two competitions for participation.
- ஒருவர் அதிகபட்சம் இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ளலாம். இரண்டுக்கும் மேற்பட்ட போட்டிகளில் பதிவு செய்தால் ஏதேனும் இரண்டு போட்டிகளை விழாக்குழுவினர் தேர்ந்தெடுப்பர்.
- Participants engaged in both competitions and cultural programs must manage their own readiness for the cultural events, as they will commence immediately following the competitions.
- Prizes and certificates will be awarded during the event.
- Participants must clean up their presentation areas and displays after the conclusion of the competition.
- The decision of the judges will be final and binding.
Disclaimer
By participating in this event, you agree to abide by all competition rules and regulations.
- The GATS Committee reserves the right to disqualify any contestant who fails to comply with the rules.
- GATS cannot accommodate requests to alter the competition timings.
- GATS is not liable for any injuries incurred during the event.
- GATS reserves the right to use participants’ performance videos and images for evaluation, promotions, and marketing purposes.
We kindly remind you that this program is organized and managed by volunteers. We request all participants to exhibit respect and cooperation towards the organizers, volunteers, and fellow members. Any inappropriate behavior, including disrespect towards coordinators, judges, volunteers, or committee members, may result in disqualification.
Your participation and support are essential to the success of this program!
We extend our best wishes to all participants.
மருதாணி போட்டி
கலைத்திறன் மற்றும் கற்பனைத்திறன் மிக்க மருதாணி போட்டிக்கு பங்கேற்பாளர்களை அழைக்கிறோம்! 45 நிமிடங்களில் கருப்பொருளுக்கு ஏற்ப மிகவும் கலைத்திறன் மிக்க வடிவமைப்பை வரையக்கூடிய போட்டியாளர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்!
கருப்பொருள் : முந்தைய தலைமுறையின் வாழ்க்கை முறை (ரெட்ரோ ஃபேஷன்)
- 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
- இது விழா நடக்கும் வளாகத்திற்குள் நடைபெறும் போட்டி.
- முதல் 20 பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் (அதிக அளவு 20 பதிவுகள்).
- போட்டியாளர்கள் தங்கள் சொந்தக் கையில் அவர்களின் மற்றொரு கைக்கொண்டு வடிவமைப்பை உருவாக்க வேண்டும் (முன் அல்லது பின் கை).
- ஆதிக்கக் கையைப் பயன்படுத்தலாம் – (வலது கை என்றால் – இடது கையில் வரையவும், இடது கை என்றால் – வலது கையில் வரையவும்)
- வடிவமைப்பு கருப்பொருளுக்கு இணங்கி இருத்தல் வேண்டும்.
- கொடுக்கப்பட்ட நேரத்தில் வரையப்பட வேண்டும் மற்றும் எந்த வகையான முன் தயாரிப்பு வேலைகளும் செய்யக்கூடாது.
- போட்டியாளர்கள் தங்கள் சொந்த கூம்புகளை (மருதாணி கூம்புகள்) கொண்டு வர வேண்டும்.
- போட்டியின் போது வடிவமைப்பிற்கு எந்த உதவியையும் யாரிடமும் பெறக்கூடாது.
- ஒருவர் அதிக அளவு இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்து இயலும்
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 2 2025 நள்ளிரவு
- முதல் 20 பதிவுகள், அல்லது ஏப்ரல் 2, 2025 நள்ளிரவு, இதில் எது முதலில் நடந்தாலும் இந்தப் பதிவுப்படிவம் செயலிழக்கப்படும்
- நடுவரின் முடிவே இறுதியானது.
பரிசுகள்:
முதல் 3 வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்!
உங்கள் படைப்பு/ வடிவமைப்புகளைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்!
Details:
We invite participants to a fun and creative Maruthaani Competition! The contestant who is able to draw the most creative design according to the theme in 45 minutes will be the winner!
Theme: Retro Fashion
Rules:
- Open to all participants aged 18 or above.
- This is an on-premise competition.
- Only the first 20 registrations will be accepted (maximum 20 entries).
- Contestants must make the design on their own hand (front or back is okay)
- Can use dominant hand – (if right handed – draw on left and vice versa)
- Design must adhere to the theme
- Must be done during the designated time and no prep work is allowed
- Contestants must bring their own cones (green cones)
- May not seek any assistance for the design during the competition
- Each participant is allowed to register for a maximum of two competitions.Deadline to register is April 2nd 2025 midnight
- The form will be closed if either of the following occurs first – Receiving 20 entries per category or April 2 2025 midnight
- The judge’s decision is final.
Prizes:
Top 3 winners will be awarded prizes
மாறுவேடப் போட்டி
சித்திரை திருவிழாவை மையமாக கொண்டு 90 மற்றும் அதற்கு முந்தைய கால உடையமைப்பில் மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
- 3 முதல் 5 வயது, 6 முதல் 8 வயது மற்றும் 11 முதல் 18 வயது குழந்தைகள் (அகவையின் அடிப்படையில் 3 தனிப்பிரிவுகள்) மட்டும் பங்கேற்க முடியும்.
- ஒருவர் அதிக அளவு இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
- குழந்தைகள் 90-கள் மற்றும் அதற்கு முந்தைய காலத்தை பறைசாற்றும் உடையமைப்பில் இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு பிரிவுக்கும் அதிகபட்சம் 10 பதிவுகள் மட்டுமே ஏற்கப்படும் (முதல் 10 பதிவுகள் மட்டுமே).
- பங்கேற்பவர்கள் ஒரு நிமிடம் பேச வேண்டும், ஆனால் பேச்சில் எந்தவொரு அரசியல், சமூகம் அல்லது மதப்பார்வைகள் இருக்கக் கூடாது.
- போட்டியின் தொடக்கத்தில் உங்கள் பெயரையும், நீங்கள் பங்கேற்கும் பிரிவின் பெயரையும் கூற வேண்டும்.
- நடுவரின் முடிவே இறுதியானது.
- பதிவுசெய்ய வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 2 2025 நள்ளிரவு
- முதல் 10 பதிவுகள், அல்லது ஏப்ரல் 2 2025 நள்ளிரவு, இதில் எது முதலில் நடந்தாலும் இந்தப் பதிவுப்படிவம் செயலிழக்கப்படும்
We invite you to participate in a fancy-dress competition with outfits that celebrate Chithirai Thiruvizha in a retro vibe.
The form will be closed if either of the following occurs first – Receiving 10 entries per category or April 2 2025 midnight
Only children aged 3 to 5 year, 6 to 8 years and 11 to 18 years (3 separate age categories) can participate.
Each participant is allowed to register for a maximum of two competitions.
Maximum 10 Participants per age category will be allowed.(First come first serve)
Participants must wear outfits that reflect the 90’s and earlier period.
Participants must speak for one minute, but the speech should not contain any political, communal or religious views.
At the beginning of the performance, participants must mention their name and the category they are competing in.
Decision of the Judges will be considered final
Deadline to register is April 2nd 2025 midnigh
புதிர் போட்டி
GATS புதிர் போட்டி! 🧩
விழா நாளில் உங்கள் குழந்தைகள் தங்கள் புதிர் தீர்க்கும் திறன்களை வெளிப்படுத்த அழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! இது ஒரு அருமையான போட்டியாக இருக்கும், மேலும் அவர்களின் திறமைகளை செயலில் காண நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்!போட்டி விவரம்:
- வயது வரம்பு
- வயது 4 முதல் 6 வரை
- வயது 7 முதல் 10 வரை
- விழா வளாகத்தில் நடைபெறும் நிகழ்வு
- ஒவ்வொரு வயதுப் பிரிவிற்கும் முதல் 10 பதிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
புதிர் போட்டி குறித்த செய்திகள்:
- புதிர் வகை: புதிர்கள் அந்தந்த வயதினருக்கு ஏற்றதாக இருக்கும்.
- நேர வரம்பு: பங்கேற்பாளர்களுக்கு புதிரை முடிக்க 60 நிமிடங்கள் வழங்கப்படும். புதிர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டவுடன் நேரம் கணக்கிடப்படும்.
- உதவி: புதிர் போட்டியின் போது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டவோ அல்லது உதவவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.
- புதிர் துண்டுகள்: அனைத்து புதிர்களும் சரியான எண்ணிக்கையிலான துண்டுகளுடன் வரும், இது அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நேர்மையான மற்றும் சமமான தொடக்கத்தை உறுதி செய்கிறது.
பதிவு விதிகள்:
- ஒவ்வொரு பங்கேற்பாளரும் அதிக அளவு இரண்டு போட்டிகளுக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்
- பதிவு செய்வதற்கான கடைசி நாள்: ஏப்ரல் 2, 2025, நள்ளிரவுக்குள்.
- ஒரு பிரிவிற்கு 10 பதிவுகளை அடைந்தவுடன் அல்லது காலக்கெடு முடிந்ததும் பதிவு படிவம் மூடப்படும்.
போட்டி முடிவு:
- வெற்றியாளர் தேர்வு: புதிரை மிகக் குறுகிய காலத்தில் முடிக்கும் குழந்தை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
முக்கிய குறிப்பு:
- நடுவரின் முடிவே இறுதியானது.
பரிசுகள்:
- இரண்டு வயதுப் பிரிவிலும் முதல் மூன்று வெற்றியாளர்கள் பரிசைப் பெறுவர்!
GATS Puzzle Competition! 🧩
We are thrilled to invite your kids to showcase their puzzle-solving skills on Festival Day! It’s going to be an exciting challenge, and we can’t wait to see their talents in action!Competition Details:
- Eligibility: Open to participants in the following age categories:
- Ages 4 to 6
- Ages 7 to 10
- On-Premise Event: This is an on-premise competition, held at the event location.
- Registration: Only the first 10 registrations will be accepted per age category
Puzzle Details:
- Puzzle Type: Puzzles will be age-appropriate.
- Time Limit: Participants will have 60 minutes to complete the puzzle. The timer starts as soon as the puzzle is handed to the child.
- Assistance: Parents and guardians are not allowed to guide or hlep the kids during the puzzle competition.
- Puzzle Pieces: All puzzles will come with the correct number of pieces, ensuring fairness and an equal start for all participants.
Registration Rules:
- Each participant is allowed to register for a maximum of two competitions.
- Deadline to register: April 2, 2025, by midnight.
- The registration form will close once we reach 10 entries per category or when the deadline passes.
Competition Outcome:
- Winner Selection:The winner will be the child who completes the puzzle in the shortest amount of time.
Important Note:
- The judge’s decision is final.
Prizes:
- Top 3 will receive prize in both age category!
Don’t miss out on this fun and exciting competition – register now and watch your child’s puzzle-solving skills shine!
நடிப்பும் நகைச்சுவையும் ததும்பும் Dubsmash போட்டி
GATS Dubsmash போட்டி: உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு அரிய வாய்ப்பு !
நீங்கள் TikTok அல்லது Reels ரசிகரா? மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் படைப்பாற்றல் பெற்றவரா? இதோ GATS Dubsmash போட்டியில் பங்கு பெற்று, பல பரிசுகளை வெல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது!
எப்படி பங்கு பெறுவது:
நீங்கள் விரும்பும் ஒரு திரைப்படக் காட்சியை அல்லது உரையாடலைத் தேர்ந்தெடுத்து, அதில் உங்கள் தனித்துவத்தை இரண்டு வழிகளில் வெளிக்கொண்டு வாருங்கள்!
• முறை 1:
திரையில் வரும் காணொளியை பயன்படுத்தி, அதற்கு உங்கள் சொந்த வசனத்தை / உரையாடலை சேர்த்து பேசி சுவை சேருங்கள். ஒரு சோகக் காட்சியை சிரிக்க வைக்கும் வகையில் மாற்றுங்கள், அல்லது ஒரு நகைச்சுவை காட்சியை கோபமான உரையாடலாக மாற்றுங்கள்! உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விட்டு, திரையில் வரும் ஒளிக்கு உங்கள் ஒலியை சேர்த்து சுவையாக வழங்கலாம்..
அல்லது
• முறை 2:
திரையில் வரும் ஒரு காட்சியை அப்படியே மீண்டும் உருவாக்கி உங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துங்கள். அது ஒரு நகைச்சுவைக் காட்சியோ அல்லது, உணர்ச்சி மிக்க வசனமோ அல்லது சோகமான நடிப்போ, இப்படி எந்த வகையிலும் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி காணொளியை அனுப்பலாம்.
விதிமுறைகள் :
1. இது GATS உறுப்பினர்களுக்கான போட்டி.
2. அனைத்து வயதினரும் பங்கு பெறலாம்.
3. ஒருவர் அதிக அளவு இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள இயலும்
4. காணொளி தமிழில் மட்டும் இருக்க வேண்டும்
5. நீங்கள் தேர்ந்தெடுக்கும் காட்சி எல்லோருக்கும் ஏற்ற வகையில் இருத்தல் அவசியம் – மதிப்பு குறைவான, தரமற்ற சொற்கள் / உரையாடல்களைத் தவிர்க்கவும். அனைத்து காணொளிகளும் GATS குழுவால் மதிப்பீடு செய்யப்பட்ட பின்பே வெளியிடப்படும்.
6.. காணொளிகளை கிடைமட்ட (portrait) நிலையில் பதிவு செய்து அனுப்புங்கள்.
7. காணொளியில் ஒருவர் மட்டுமே இருக்கவேண்டும்
8. இந்தக் காணொளிகள் GATS வலையொளியில் (யூடியூப் சேனலில்) பதிவேற்றப்படும், மேலும் ஏப்ரல் 10, 2025 இரவு 10 மணிக்குள் அதிக அளவு விருப்பங்களைப் பெறும் காணொளி வெற்றியாளராகக் கருதப்படும்.
9. உங்கள் காணொளிகள் 1 நிமிடத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பரிசுகள்: முதல் 3 சிறந்த காணொளிகள் பரிசுகளை வெல்லும்!
உங்கள் படைப்பாற்றலை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
“மாப்பிள்ளை அவராக இருந்தாலும், அவர் போடப்போகும் சட்டை உங்களுடையது 😊
களத்தில் இறங்குங்கள்.. வெல்லுங்கள்!”
GATS Dubsmash Competition: Show Us Your Creativity! 🎬🎤
Are you a fan of TikTok or Reels? Do you have a creative side that loves to make people laugh or think? Here’s your chance to shine and win exciting prizes in the GATS Dubsmash Competition!
How to Participate:
Pick a movie scene, dialogue, or moment that you love and bring your unique twist to it! You have two options to get started:
- Option 1: Use the original video and add your own creative dialogue with a voiceover. Make a serious scene funny, or turn a comedy scene into a dramatic masterpiece! Let your imagination run wild
- OR
- Option 2: Recreate the scene exactly as it is, showcasing your acting skills. Whether it’s a funny moment, an emotional speech, or a complex dialogue, bring your best performance to life.
Rules:
- Open to GATS Members Only
- No Age Restrictions
- Each participant is allowed to register for a maximum of two competitions.
- Do the video in Tamil only. Only person is allowed to perform in the video
- Maintain Respectful Language – Please ensure that your dialogues are appropriate and respectful. Avoid using inappropriate or offensive language. All videos will be reviewed by the GATS team, and GATS reserves the right to disapprove any videos that do not meet our standards of decency.
- Submit your video as a Reel or Dubsmash in portrait mode
- Videos should be within 1 minute time limit
- The Videos will be uploaded in GATS Official Youtube channel and the video getting maximum likes by April 10th 2025 10 PM will be considered winner
- Upload your videos before April 5 2025, midnight
- Be as creative and fun as possible!
Prizes:
The top 3 best entries will win exciting prizes! So bring your A-game and show us what you’ve got!
Let the creativity flow, make the world laugh, and let’s celebrate your talent in the GATS Dubsmash Competition! 🎬✨
“Flip the Script, Clip the Fun, and Win the Spotlight!“
ஜோடி நம்பர் 1 நடனப்போட்டி
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 45 ஆவது சித்திரைத் திருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடக்கும் பெரியவர்களுக்கான நடனப் போட்டிகள்.
இணையவழிப் பதிவு மற்றும் முதல் சுற்றுக்கான காணொளிகளை விண்ணப்பிக்க இறுதி நாள்: ஏப்ரல் 5, 2024 நள்ளிரவு (அமெரிக்கக் கிழக்கு நேரம்)
முதல் சுற்று முடிவு நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
காணொளி பதிவு செய்வதற்கு முன் போட்டி மற்றும் காணொளி விதிமுறைகளை தவறாமல் படிக்கவும்.
போட்டி விதிமுறைகள்:
- பங்கேற்பாளர்கள் இருவரும் 18 வயதிற்கு மேல் மற்றும் தமிழ்ச் சங்க உறுப்பினராக இருக்க வேண்டும்
- நடன இணைகளை (ஜோடிகள்) பாலின வேறுபாடின்றி உங்கள் குழுவில் அமைத்து கொள்ளலாம்.
- முதல் சுற்றுக்கான காணொளிகள் 3 – 4 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.
- காணொளியின் தொடக்கத்தில் பங்கேற்பாளர்கள் “GATS சித்திரைத் திருவிழா Jodi No.1 போட்டிக்கான காணொளி” என்று கூறித் தொடங்க வேண்டும்.
- காணொளிகள் கிடைமட்டமாக உயர்தரத்தில் (HD) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, இறுதிப் போட்டி கிவின்னேட் உயர்நிலைப் பள்ளியில் நிகழ்வன்று நடத்தப்படும்
- ஒன்றிற்கும் மேற்பட்ட போட்டியில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் போட்டிக்கான நேரத்தை அறிந்து தங்கள் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும்
- இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், போட்டியன்று நடனத்திற்கேற்ற உடை அலங்காரங்களுடன் வர வேண்டும்.
- ஒருவர் அதிக அளவு இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
காணொளிக்கான விதிமுறைகள்:
1. நடனமாடுவதற்கு முன் போட்டியாளர்கள் “GATS 2025 சித்திரை திருவிழா – Jodi No.1 போட்டிக்கான காணொளி” என்று சொல்ல வேண்டும்.
2. காணொளி கிடை மட்ட வடிவில் இருக்க வேண்டும். காணொளியில் எந்த விதமான திருத்தமோ தொகுத்தலோ (Editing) செய்யப் பட்டிருக்கக்கூடாது.
முதல் சுற்றுக்கான பாடல் வகைகள்:
- கொண்டாட்டமான தமிழ்ப்பாடல்கள்.
- 80களில் வெளிவந்த தமிழ்ப் பாடல்கள் – Retro Songs.
- நாட்டுப்புறப் பாடல்கள்.
- பொருந்தாத மற்றும் தரக்குறைவான சொற்கள், இரட்டை பொருள் உள்ள பாடல்களை ஏற்றுக்கொள்ள இயலாது.
போட்டிகள் குறித்த கேள்விகளுக்குப் பின்வரும் மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்: tamilcompetition@gatamilsangam.org
Greater Atlanta Tamil Sangam – 45th Chithirai Festival celebration is hosting Dance competitions for adults:
GATS Jodi #1
Deadline for online registration and first-round video submissions: April 5, 2024, midnight (US Eastern Time).
The first round results date will be announced later.
Please read the contest and video rules carefully before recording a video.
Contest Rules:
- Both participants in a Jodi (pair) must be members of GATS and at least 18 years old.
- Pairing: Jodis can be of the same or different gender. Basically, a duo / couple participation.
- Performance Duration: The dance video must be between 3 to 4 minutes long.
- Video Submission Requirements: The video must begin with the Jodi stating: “Gats Chithirai Thiruvizha 2025 Jodi Competition.” It should be recorded in landscape mode, in HD quality, and submitted in MP4 format.
- Competition Structure: The preliminary round will be conducted online, and selected Jodis will advance to the final round, which will take place in person at the event venue.
- Other Competitions: Participants may compete in multiple events but must manage their own time and schedule.
- Final Round Preparation: If selected, participants must arrive fully prepared with makeup and attire, as no green rooms will be available at the venue.
- Each participant is allowed to register for a maximum of two competitions.
- Judging: The decision of the judges is final and cannot be contested.
Video Terms:
1. Before dancing, contestants must say “GATS 2025 Chithirai Festival – Dance Video for Jodi No.1 Competition”.
2. The video must be in landscape format. The video must not have been edited in any way.
Song categories for the first round:
Songs with inappropriate and vulgar songs will not be accepted
Tamil Songs of Celebration
Tamil Songs from the 80s – Retro Songs
Folk Songs
பாட்டுப் பாடவா போட்டி
இணையவழிப் பதிவு மற்றும் முதல் சுற்றுக்கான காணொளிகள் விண்ணப்பிக்க இறுதி நாள்: ஏப்ரல் 5, 2024 நள்ளிரவு (அமெரிக்கக் கிழக்கு நேரம்)
முதல் சுற்று முடிவு மற்றும் இறுதிச்சுற்று நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
பிரிவுகள்:
- 5 முதல் 8 வயது வரை – ஆம்பல்
- 9 முதல் 12 வயது வரை – குறிஞ்சி
- 13 முதல் 17 வயது வரை – காந்தள்
- 18 மற்றும் அதற்கு மேல் – வாகை
காணொளி பதிவு செய்வதற்கு முன் போட்டி மற்றும் காணொளி விதிமுறைகளை தவறாமல் படிக்கவும்
போட்டி விதிமுறைகள்
- இப்போட்டி, வயதிற்கு ஏற்ப நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு சுற்றுகளாக நடத்தப்படும்.
- முதல் சுற்றில் கொடுக்கப்பட்ட பாடல் வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து பாடவேண்டும்.
- முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறியவர்கள்/பெரியவர்கள் இறுதிச் சுற்றிற்கு செல்வார்கள்.
- இறுதிச்சுற்று நேரில் நடத்தப்படும்.
- ஒருவர் அதிக அளவு இரண்டு போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
- நடுவர்கள் முடிவே இறுதியானது.
- இப்போட்டியின் வெற்றியாளர்களின் பெயர்கள் சித்திரை திருவிழா நாளில் மேடையில் அறிவிக்கப்படும்.
- பதிவு செய்யும் நேரத்தில் தமிழ்ச் சங்க உறுப்பினராக இருத்தல் அவசியம். (உறுப்பினரல்லாதவர்களின் பதிவுகளை ஏற்றுக்கொள்ள இயலாது)
காணொளிக்கான விதிமுறைகள்
1. பாடுவதற்கு முன் போட்டியாளர்கள் “GATS 2025 சித்திரை திருவிழா – பாட்டுப் பாடவா? போட்டிக்கான காணொளி” என்று சொல்ல வேண்டும்
2. காணொளி கிடை மட்ட வடிவில் இருக்க வேண்டும். காணொளியில் எந்த விதமான திருத்தமோ தொகுத்தலோ (Editing) செய்யப் பட்டிருக்கக்கூடாது
3. Smule காணொளிகள் ஏற்றுக் கொள்ள இயலாது
4. பாடலுக்கான கரோக்கியை (Karoake ) பின்னணியில் ஒலித்து பாட வேண்டும்
முதல் சுற்றுக்கான பாடல் வகைகள்:
- கொண்டாட்டமான தமிழ்ப்பாடல்கள்
- 80களில் வெளிவந்த தமிழ்ப் பாடல்கள் – Retro Songs
- நாட்டுப்புறப் பாடல்கள்
- பொருந்தாத மற்றும் தரக்குறைவான சொற்கள் உள்ள பாடல்களை ஏற்றுக்கொள்ள இயலாது
- நடுவரின் தீர்ப்பே இறுதியானது
இறுதிச்சுற்றுக்கான பாடல் தேர்வுகள் மற்றும் போட்டி விவரங்கள்தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பின்னர் அனுப்பப்படும்.
உறுப்பினர் பரிந்துரைப்போட்டி (Membership Referral)
GATS Membership Referral Competition:
- Goal: Encourage current GATS members to refer new members or renew existing members.
- Eligibility: Open to all existing GATS members.
- Referral Scope: Refer any number of friends, family, neighbors, or colleagues for individual, family, or student memberships. This includes individuals who are not current members or those who have not renewed for the current year.
- Consent: It’s crucial to get consent from the person being referred before sharing their Name, Email, and Contact number. GATS will use these details to contact them regarding the membership.
- Process:
- Only GATS member can participate in this referral program
- GATS Member informs the potential member about the referral program and gets consent to share their details.
- Member provides the details to GATS using the referral form
- GATS contacts the referred individual.
- If the referred individual enrolls/renews, it is considered a successful referral.
- Point System:
- Referral Points: One point awarded for each person referred.
- Membership Points: One point awarded for each referred person who takes up a GATS membership.
- Prizes:
- For Maximum Membership Points
- For Maximum Referral Points
- Invalid Entries: Providing invalid Name, Email, or Number will result in the referral being invalid.
- Contact: For any questions, email contact@gatamilsangam.org or tamilcompetition@gatamilsangam.org.
Key Takeaways & Important Points for GATS Members:
- Ethical Considerations: The emphasis on obtaining consent is important. It’s essential to communicate clearly with your contacts about the program and how their information will be used.
- Focus on Quality Referrals: Don’t just refer anyone. Focus on people who might genuinely be interested in GATS membership.
- Point Calculation: Make sure to understand the difference between Referral points and Membership points, as there are separate prizes for each.
- Verify Information: Double-check the contact information you provide to GATS to avoid invalid entries.
- Utilize Resources: Contact the provided email addresses if you have any queries about the competition.
Please share this with your friends and encourage them to join as members too!
GATS membership benefits:
Did you know GATS Membership comes with incredible benefits?
• $15,000 Basic Life and AD&D insurance for one annual registered member per family
• Free Medical Clinic for visiting parents
• Opportunity to connect to 5000+ Tamil families in Greater Atlanta Area
• Access to GATS Helpline – Emergency Response Crisis Team
• Opportunities for youth volunteering and free tutoring
• Internship programs, SAT coaching, and guidance through the college application process
• Eligibility for the United States President’s Volunteer Service Award (PVSA) to honor youth volunteers
• Participation in Tamil competitions throughout the year
• Access to Cultural and Celebrity events
• Senior Program (Visiting Parents Connect)
• Celebrate Women’s Day
• Lead or participate in various committees, including charity-related activities
• Tax and financial planning sessions
• Discount coupons from popular restaurants and businesses
These are just highlights and there are even more benefits you can get for a $50 membership fee. Feel free to reach out to us if you have any questions.
Summary:
This is a good opportunity for GATS members to help grow their Sangam and potentially earn a prize. The key to success is to actively promote the program, reach out to interested individuals, and ensure that all referrals are made with consent and accurate information.
*** Signup will close on April 10th 2025 midnight ***
GATS உறுப்பினர் பரிந்துரைப் போட்டி:
இலக்கு: தற்போதைய GATS உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க அல்லது ஏற்கனவே புதுப்பிக்காத உறுப்பினர்களைப் புதுப்பிக்க ஊக்குவித்தல் .
தகுதி: தற்போதுள்ள அனைத்து GATS உறுப்பினர்களும்.
பரிந்துரை நோக்கம்: தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், அண்டை வீட்டார் அல்லது சக ஊழியர்களை, GATS – தனிநபர், குடும்பத்தினர் அல்லது மாணவர் உறுப்பினர்களாக பரிந்துரைக்கவும். நடப்பாண்டில் உறுப்பினர்களாக இல்லாதவர்கள் அல்லது நடப்பு ஆண்டிற்கு புதுப்பிக்காதவர்களை பரிந்துரையுங்கள்.
ஒப்புதல்: பரிந்துரைக்கப்படுபவரின் பெயர், மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண்ணைப் பகிர்வதற்கு முன் அவரிடமிருந்து ஒப்புதல் பெறுவது மிகவும் முக்கியம். உறுப்பினர் தொடர்பாக அவர்களைத் தொடர்பு கொள்ள GATS இந்த விவரங்களைப் பயன்படுத்தும்.
செயல்முறை:
- GATS உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ளமுடியும்
- உறுப்பினர் பரிந்துரைத் திட்டம் குறித்து சாத்தியமான உறுப்பினருக்குத் தெரிவித்து, அவர்களின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் பெறவேண்டும்.
- உறுப்பினர் GATS-க்கு விவரங்களை வழங்கவேண்டும் .
- GATS, பரிந்துரைக்கப்பட்ட நபரைத் தொடர்பு கொள்ளும் .
- பரிந்துரைக்கப்பட்ட நபர் பதிவுசெய்தால், அது வெற்றிகரமான பரிந்துரையாகக் கருதப்படும்.
புள்ளி அமைப்பு:
- பரிந்துரை புள்ளிகள்: பரிந்துரைக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் சார்பில் உங்களுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.
- உறுப்பினர் புள்ளிகள்: GATS உறுப்பினர் பதவியைப் பெறும் ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட நபரின் சார்பில் உங்களுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.
செல்லாத உள்ளீடுகள்: செல்லாத பெயர், மின்னஞ்சல் அல்லது எண்ணை வழங்குவது பரிந்துரையை செல்லாததாக்கிவிடும்.
தொடர்பு: ஏதேனும் கேள்விகளுக்கு, contact@gatamilsangam.org அல்லது tamilcompetition@gatamilsangam.org என்ற முகவரிகளைத் தொடர்பு கொள்ளவும்.
நெறிமுறை பரிசீலனைகள்: உங்கள் நண்பர்களின் ஒப்புதல் பெறுவது முக்கியமானது. அவர்களின் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்து உங்கள் நண்பர்களுடன் தெளிவாக விளக்குவது அவசியம்.
தரமான பரிந்துரைகளில் கவனம் செலுத்துங்கள்: GATS உறுப்பினர் பதவியில் உண்மையிலேயே ஆர்வமுள்ளவர்களை மட்டும் பரிந்துரையுங்கள்.
புள்ளி கணக்கீடு: பரிந்துரை புள்ளிகள் மற்றும் உறுப்பினர் புள்ளிகளுக்கு இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளுங்கள், ஏனெனில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பரிசுகள் உள்ளன.
தகவலைச் சரிபார்க்கவும்: செல்லாத உள்ளீடுகளைத் தவிர்க்க GATS க்கு நீங்கள் வழங்கும் தொடர்புத் தகவலை இருமுறை சரிபார்க்கவும்.
வளங்களைப் பயன்படுத்தவும்: போட்டி குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளைத் தொடர்பு கொள்ளவும்.
பரிசுகள்:
- அதிக அளவில் உறுப்பினர் புள்ளிகள் பெறும் நபருக்கு
- அதிக அளவில் பரிந்துரை புள்ளிகள் பெறும் நபருக்கு
GATS உறுப்பினர் சலுகைகள்:
• ஒரு குடும்பத்திற்கு ஒரு உறுப்பினருக்கு $15,000 அடிப்படை ஆயுள் மற்றும் AD&D காப்பீடு
• வருகை தரும் பெற்றோருக்கு இலவச மருத்துவ உதவி
• அட்லாண்டா பகுதியில் உள்ள 5000+ தமிழ் குடும்பங்களுடன் இணைவதற்கான வாய்ப்பு
• GATS – அவசரகால/நெருக்கடி நிலைக் குழு
• இளைஞர் தன்னார்வத் தொண்டு மற்றும் இலவச பயிற்சி
• கல்லூரி விண்ணப்ப பயிற்சி, SAT பயிற்சி மற்றும் வழிகாட்டுதல்
• இளைஞர் தன்னார்வலர்களை பெருமைப்படுத்தும் விதமாக அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் தன்னார்வ சேவை விருது (PVSA)
• ஆண்டு முழுவதும் தமிழ் போட்டிகளில் பங்கேற்பது
• பண்பாட்டு நிகழ்வுகள்
• மூத்தோருக்கான நிகழ்ச்சிகள்
• மகளிர் நாள் கொண்டாட்டம்
• தொண்டு நடவடிக்கைகள்
. பல்வேறு குழுக்களுக்கு தலைமை தாங்குதல்
• வரி மற்றும் நிதி திட்டமிடல் நிகழ்வுகள்
• பிரபலமான உணவகங்கள் மற்றும் வணிகங்களிலிருந்து தள்ளுபடி கூப்பன்கள்
இதோடு மேலும் பல சிறப்புகள் உள்ளன. வெறும் $50 உறுப்பினர் கட்டணத்தில் கூடுதல் நன்மைகள் பெறமுடியும். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
சுருக்கம்:
GATS உறுப்பினர்கள் தங்கள் சங்கத்தை வளர்க்கவும், நண்பர்களை இணைத்து பரிசைப் பெறவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. வெற்றிக்கான திறவுகோல், திட்டத்தை தீவிரமாக விளம்பரப்படுத்துவது, ஆர்வமுள்ள நபர்களை அணுகுவது மற்றும் அனைத்து பரிந்துரைகளும் சம்மதம் மற்றும் துல்லியமான தகவலுடன் செய்யப்படுவதை உறுதிசெய்வதாகும்.
சிந்தனையைத் தூண்டும் கனெக்சன் ( Connexion ) போட்டி
நீங்கள் Connexion ரசிகரா? இது உங்களுக்கான விளையாட்டு! இந்த விளையாட்டில் பங்கேற்பதன் மூலம் உங்கள் கனெக்ஷன் திறமையைக் காட்டுங்கள், படங்கள்/துப்புகளுக்கு இடையேயான தொடர்பைக் கண்டுபிடித்து சரியான பதிலைக் கண்டறியவும்
- பங்கேற்பாளர் GATS உறுப்பினராக இருக்க வேண்டும்
- பங்கேற்க வயது வரம்புகள் இல்லை
- கனெக்ஷன் கேள்விகள் Facebook இல் மட்டுமே இடுகையிடப்படும். கருத்துப்பெட்டி முடக்கப்பட்டிருக்கும்.
- பதில்களை, கேள்வி/பதிவில் வழங்கப்பட்ட Google படிவத்தில் வழங்க வேண்டும்
- 10 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு ஒன்று என்றவகையில், 10 கேள்விகள் வழங்கப்படும்
- சரியான பதிலைக் கண்டறிய ஒவ்வொரு கேள்விக்கும் 5 குறிப்புகள் இருக்கும்
- ஒவ்வொரு குறிப்பும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரே நாளில் இடுகையிடப்படும். எனவே உடனடி புதுப்பிப்புகளுக்கு எங்கள் Facebook பக்கத்தைப் பின்தொடரவும்
- 5 குறிப்புகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து பதிலைக்கண்டறிந்தவுடன் அதில்ச் சமர்ப்பிக்கலாம். Ex: 3வது குறிப்பிலிருந்து நீங்கள் பதிலைக் கண்டுபிடித்திருந்தால், 5 குறிப்புகளும் இடுகையிடப்படும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. பதிலைக் கண்டுபிடித்தவுடன் சமர்பிக்கலாம். ஆனால் நீங்கள் அதை தவறாகவிடைஅளித்தால், அந்த கேள்விக்கு உங்களுக்கு எந்தப் புள்ளிகளும் கிடைக்காது
- ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், முதல் பதில் (சரி அல்லது தவறு) பரிசீலிக்கப்படும். எனவே சமர்ப்பிக்கும் போது கவனமாக இருங்கள்.
- ஒருவருக்கு இரண்டு போட்டிகள் என்கிற விதி இந்த போட்டிக்கு மட்டும் கிடையாது
- நீதிபதிகளின் முடிவு இறுதியானது
பரிசு: அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தைப் பெறுபவர்க்கு பரிசு வழங்கப்படும்.
Connexion Game Competition:
Are you a Connexion fan? This is your game! Show your Connexion skills by participating in this game and find the connection between the images/clues and find the right answer.
Rules:
- Participant must be a GATS member
- No age restrictions to participate
- Connexion questions will be posted only in Facebook with comments disabled
- Answers should be submitted in the google form provided in the question/post
- There will be 10 questions (one per day for 10 days)
- Each question will have 5 clues to find the right answer
- Each of the clues will be posted on the same day with a time interval. So follow our Facebook page for immediate updates
- You can submit your answer as soon as you find it from any of the 5 clues. Say if you have found out the answer from the 3rd clue, you don’t have to wait until all 5 clues are posted. But if you get it wrong, you will not get any points for that question
- Only one answer should be submitted for each question. If more than one answer has been submitted, the first one (right or wrong) will be considered. So please be cautious while submitting.
- Rule of Maximum 2 competitions per participant is not applicable for this competition
- Judges decision will be final
Prizes: First prize will be given to the person scoring maximum points.






