அட்லாண்டா தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

அமெரிக்காவில் வாழும் நமது தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வாக, அட்லாண்டா மாநகரத்  தமிழ்ச் சங்கத்தின் சீரிய முயற்சியால் தமிழ் மொழிக்காக ஒரு வாரத்தைப் பெற்றுள்ளோம். அதன்படி, பிப்ரவரி 21 முதல் 27 வரை, தமிழ் வாரத்தை உங்கள் அனைவருடனும் கொண்டாட அணியமாகிக் கொண்டிருக்கிறோம். அந்த வாரம் முழுவதும் நம் தமிழ் மொழியைக் கொண்டாட உங்களுக்காக பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைக்க உள்ளோம். அவை பின்வருமாறு,

  • குழலினிது யாழினிது (7 வயது வரை): பிள்ளைகளின் மழலைத் தமிழைக் கேட்போம்.
  • ஒரு கதை சொல்லவா (5 முதல் 15 வயது வரை): நீதிக் கதைகள், கற்பனை கதைகளை நம் பிள்ளைகள் கூற கேட்போம்.
  • ஒளி வழித் தமிழ் (அனைத்து வயதினருக்கும்): தமிழைக் கருப்பொருளாகக் கொண்ட காணொளிகள்.
  • ஆலம் விழுதுகள் (அனைத்து வயதினருக்கும்): நம் தமிழ் ஆசிரியரை நினைவு கூர்ந்து போற்றுவோம். அட்லாண்டா தமிழ் ஆசிரியர்களைப் போற்றுவோம்.
  • மரபுக் கலைகள் (10 வயதிற்கும் மேல்): பறை, சிலம்பம், கரகம் ஆகிய நம் மரபுக் கலைகளைப் பறை சாற்றும் நடனங்கள்.
  • இயலும் தமிழும் (18 வயதிற்கு மேல்): தங்கள் சொந்த படைப்பான கவிதை காணொளிகள். அட்லாண்டா தமிழ் எழுத்தாளர்களைப் போற்றுவோம்.
  • அமுதே சுவையே (18 வயதிற்கு மேல் ): உணவே மருந்தான நம் மரபு சார் உணவு வகைகளைக் குறித்த காணொளிகள்.

உங்களுடைய காணொளிகளை அனுப்ப விண்ணப்பப் படிவங்கள் நாளை (பிப்ரவரி 16) அனுப்பப்படும்!
வாருங்கள்! தமிழ் வாரத்தில் நாம் அனைவரும் இணைந்து நம் தமிழ் மொழியாம் தமிழைக் கொண்டாடுவோம்!

We are proud to announce that, through the dedicated efforts of the Greater Atlanta Tamil Sangam, we have secured a week to celebrate the Tamil language. From February 21 to 27, we will be celebrating Tamil Week with a series of events designed to honor our language and culture. 


Application forms for submitting videos will be sent out tomorrow (February 16).

Join us as we come together to celebrate our beautiful Tamil language during Tamil Week!

Sincerely
GATS – 2025