அட்லாண்டாத் தமிழ் மக்களுக்கு வணக்கம்,

உங்களுக்கு பொன்னியின் செல்வன் புதினம் பிடிக்குமா? பொன்னியின் செல்வன் திரைப்படம், பாத்துட்டீங்களா? நம் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நம் சோழ மன்னர்கள் வரலாற்றுப் பிண்ணனியில் அமைந்துள்ள புதினத்தின் கதை மாந்தர்களை சந்திக்கவும் அந்த உலகத்தில் கதை மாந்தர்களாய் உலா வரவும் ஒரு வாய்ப்பு!

வரும் அக்டோபர் மாதம் 29ஆம் தேதி சனிக்கிழமை பகல் 2 மணிக்கு நமது தமிழ்ச் சங்கத்தின் தமிழே அமுதே, இசை மழை மற்றும் மூத்தோர்களுக்கான குழு ஆகிய மூன்று துணைக்குழுக்களும் இணைந்து நடத்தும் “நெஞ்சம் மறப்பதில்லை – புதினம், புதிர், புத்திசை” என்ற பொன்னியின் செல்வன் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பின்வரும் பகுதிகள் அனைவரும் கலந்து கொண்டு, ரசிக்கும் வகையில் திட்டமிட்டு வருகிறோம். இவை அனைத்தும் பொன்னியின் செல்வனை கருப்பொருளாக கொண்டு அமைய உள்ளது கூடுதல் சிறப்பு.

  • புதிர் விளையாட்டு
  • நூல் பகிர்வு
  • இன்னிசை மழை
  • பெரியவர்களுக்கான அறுசுவை உணவுப் உணவுப் போட்டி

உங்கள் நண்பர்கள் பலர் ஆர்வத்துடன், சோழர் கால உடையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள். நீங்களும் உங்களுக்கு விருப்பமான கதை மாந்தர் உடையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான், பின்வரும் வருகைப் பதிவு இணைப்பைச் சொடுக்கி , உங்கள் வருகையை உறுதி செய்து கொள்ளுங்கள்.

நிகழ்ச்சி கம்மிங் பொது நூலகத்தில் வரும் 29ஆம் தேதி பகல் 2 மணி முதல் நடைபெற உள்ளது

இடம்:
கம்மிங் பொது நூலகம்
Cumming Public Library
585 Dahlonega St, Cumming, GA 30040