
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
முத்தமிழ் விழா- 2022 ஆம் ஆண்டுத் தமிழ்ப் போட்டிகளுக்கான அழைப்பு!
2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் போட்டிகள் :
அட்லாண்டாத் தமிழ் மக்களுக்கு வணக்கம்,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தும் 2022 ஆண்டின் முத்தமிழ் விழாவில் தமிழ்ப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டியில் கலந்துக் கொள்ள விருப்பமுடைய குழந்தைகள் தமிழ்ச் சங்க உறுப்பினராக இருப்பின் அவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை, உறுப்பினராக இல்லாதவர்கள் $10 ஐ செலுத்தி போட்டிகளில் பங்கு கொள்ளலாம்.
நேரடிப் போட்டி: பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இந்த ஆண்டு முத்தமிழ் விழா நேரடியாக நடைபெறுகிறது, தவறாமல் அனைவரும் உங்கள் குழந்தைகளை போட்டிகளில் கலந்து கொள்ள செய்யுங்கள், இன்றே பதிவு செய்யுங்கள்!
தேதி: அக்டோபர் 8 (சனிக்கிழமை)
இடம்: Hightower Trail Middle School, 3905 Post Oak Tritt Rd, Marietta, GA 30062
போட்டிகளில் கலந்து கொள்ள பதிவு செய்ய கடைசி நாள் 10/04/2022 (செவ்வாய்க்கிழமை). போட்டிகள் குறித்தான மேலும் தகவல்கள் மற்றும் விதிமுறைகளைத் தெரிந்துக்கொள்ளக் கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்
மேலும் விவரங்கள் மற்றும் விதிமுறைகளை அறிய இந்த இணைப்பைச் சொடுக்கவும்
வெற்றிப்பெறும் குழந்தைகளுக்குக் கோப்பைகள் முத்தமிழ் விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்படவுள்ளன.
புத்தகத்தின் வாயிலாகவும் ஆசிரியர்களின் திறமையான பயிற்சியாலும் கற்றுக்கொண்ட தமிழை, அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்செல்லவே இந்தப் போட்டிகள். களத்தில் வெற்றியைத் தாண்டிக் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. விரைந்துப் பதிவு செய்யுங்கள்!
நீங்கள் 2022ஆம் ஆண்டில் தமிழ்ச் சங்க உறுப்பினராக இல்லையென்றால், $10 கட்டணம் செலுத்தி இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்!