
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
பெரியவர்களுக்கான அறுசுவை உணவுப் போட்டி
பெரியோர்களே!
நீங்கள் நன்கறிந்த தமிழர் பாரம்பரிய உணவு வகைகளை சமைத்துக் காட்டத் தயாரா? அதனை சுவைத்துச் சிறப்பிக்க நாங்களும் தயார்!!
உங்கள் கைப்பக்குவத்தைக் காட்ட ஒரு அருமையான வாய்ப்பு! இணையுங்கள் எங்களுடன்!!
அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள நெஞ்சம் மறப்பதில்லை- புதினம், புதிர், புத்திசை – பொன்னியின் செல்வன் சிறப்பு நிகழ்ச்சியின் போது, பெரியவர்களுக்கான அறுசுவை உணவுப் போட்டி நடைபெறவுள்ளது.
நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள GATS உறுப்பினராக இருக்க வேண்டும். உறுப்பினர் அல்லாதவர் $10 கட்டணம் செலுத்தி போட்டியில் கலந்து கொள்ளலாம். நீங்கள் GATS உறுப்பினரின் பெற்றோராக இருந்தால், நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
போட்டிக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
1. ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் வீட்டிலேயே உணவைத் தயாரித்து போட்டி நடைபெறும் இடத்தில் வழங்க வேண்டும்
2. பரிமாறப்படும் உணவு 20 பேருக்கு பரிமாறும் வகையில் சிறிய தட்டு (Small Tray ) அளவில் இருக்க வேண்டும்
3. வழங்கப்பட்ட கருப்பொருள் (தமிழர் பாரம்பரிய உணவு) அடிப்படையில் போட்டியாளர்கள் உணவைத் தயாரிக்க வேண்டும்
4. போட்டியாளர் உணவின் பெயர் மற்றும் பொருட்களை ஒரு காகிதம் /அட்டையில் பட்டியலிட்டு காட்சிக்கு வைக்க வேண்டும்
5. போட்டியில் பங்கேற்பவர்கள் மதியம் 1.10 மணிக்கு முன்னதாக அறையில் இருக்க வேண்டும்.
6. மற்றும் 1.30 மணிக்கு முன் தங்கள் உணவை நடுவர்களுக்கு வழங்க வேண்டும் . பகல் 1.30 முதல் 2 மணி வரை தீர்ப்பு வழங்கப்படும்.
7. சுவை மற்றும் உணவை அழகாக காட்சிப்படுத்துதல் ஆகியவைகளின் அடிப்படையில் மதிபெண்கள் வழங்கப்படும்.