அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தமிழே! அமுதே!

அட்லாண்டா மாநகரத் தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம்! நமது தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் தமிழே அமுதே நூல் அறிமுக நிகழ்வு நீங்கள் அறிந்ததே!

நீங்கள் படித்த தமிழ்நூல்கள் குறித்த தகவல்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள ஓரு வாய்ப்பு. நூல்களை படித்தும் பகிர்ந்தும் தமிழ் நூல்கள் படிப்பதை ஊக்கப்படுத்தும் எண்ணத்தை மையமாக கொண்டும் தொடங்கப்பட்டக் குழு.

மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகள் இந்நிகழ்வு நடைபெறும்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை தமிழே அமுதே சிறுவர் வார நிகழ்வு நடத்தப்படும், குழந்தைகள் தாங்கள் படித்த தமிழ்ப் புத்தகத்தை பற்றி பார்வையாளர்களுடன் பகிர்வார்கள், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதும் சிறுவர்களே!

நூலாய்வின் தொடக்கத்தில் குழந்தைகளின் திருக்குறள் நேரம் பகுதி நடைபெறும். இப்பகுதியில் இரண்டு குழந்தைகள் தாங்கள் படித்த ஒரு திருக்குறள்களை பொருளுடன் பகிர்ந்து கொள்வார்கள். அவர்களைத் தொடர்ந்து இருவரின் நூலாய்வு நடைபெறும்.