GATS பொங்கல் சிறப்பு பட்டிமன்றத்தை மகிழ்ச்சியும் சிரிப்பும் நிறைந்த ஒரு கொண்டாட்டமாக மாற்றிய மக்கள் அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த நன்றி!
பனிப்புயலால் ஒத்தி வைக்கப்பட்டு, திருமிகு ராஜா மற்றும் திருமிகு பாரதி பாஸ்கர் அவர்களால் வார நாள் ஒன்றில் மட்டுமே கலந்து கொள்ள இயலும் என்ற நிலையில் பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் பிப்ரவரி மூன்றாம் நாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. 300 நபர்கள் அமரும் இருக்கை வசதி கொண்ட Reflections Hall , Cumming இல் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அரங்கம் நிறைய தேவைப்பட்ட அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டன. ஒரு வார நாளில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கிடைத்த இந்த வரவேற்பே இந்நிகழ்ச்சியின் வெற்றிக்குச் சான்றாகும்.
மேலும் அரங்கின் வரையறுக்கப்பட்ட இருக்கை வசதிகளால் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டியிருந்தாலும், உங்கள் புரிதலும் கனிவான ஒத்துழைப்பும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக மாற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது.
நிகழ்ச்சி நாளன்று, தொழில்நுட்பத்தால் குடும்ப மகிழ்ச்சி பெருகுகிறது! குறைகிறது! என்ற தலைப்பில் நடுவர் திருமிகு ராஜா அவர்களின் முன்னுரை மற்றும் பேச்சாளர் அறிமுகத்தோடு 2026 பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் இனிதே தொடங்கியது. இந்த சிறப்புப் பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட அட்லாண்டா பேச்சாளர்கள் அனைவரும் மிகச் சிறப்பாக பேசி தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள்.
அடுத்தத் தலைமுறை பிள்ளைகளான ஷ்ரேயா மற்றும் ஆஷ்னா அவர்களின் புலமையான பேச்சும் மேடை ஆளுமையும் காண்போர் அனைவரையும், நமது சிறப்பு விருந்தினர்களையும் பெருமிதத்தில் ஆழ்த்தியது. சிந்திக்கத் தூண்டும் கருத்துகள், நகைச்சுவை, புள்ளி விவரங்கள் என்று தொடர்ந்து இரண்டரை மணி நேரத்திற்கு மேல் சிறப்பாக நடைபெற்றது.

எதிர்பாராத மாற்றங்கள் நடைபெற்று வார நாளுக்கு பட்டிமன்றம் மாற்றப்பட்டாலும் உங்களின் ஒத்துழைப்பால் மட்டுமே எங்களால் இவ்வளவு குறைவான நேரத்தில் நிறைவான நிகழ்ச்சியை செய்ய இயன்றது.
இந்நேரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு கொடையளித்து உதவிய அனைத்து புரவலர்களுக்கும் எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்!
புரவலர்கள் பட்டியல்:
Integrated (தலைமை புரவலர்) , Venkat Samynathan, Tanishq USA, Sikal Adhipathi and Rowles LLC, Octave, Onsite IT Advisors and Belly button , Talent AV Productions (JIJO), Nare and Aish, Come to Chutney, Girish Modi, Reflections Event Space
மேலும், இந்த குறுகிய காலத்தில், இந்நிகழ்ச்சிக்கு தள்ளுபடி விலையில் அரங்கம் தந்துதவிய Reflections Event Space நிறுவனத்திற்கு உளமார்ந்த நன்றி !
உங்கள் பங்கேற்பால் இந்தப் பொங்கல் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத நினைவாக அமைந்தது! இந்நேரத்தில் மீண்டும் உங்கள் அனைவருக்கும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் நன்றியினை உரித்தாக்குகிறோம்!
Heartfelt Thanks for Making GATS Pongal Special Pattimandram a Grand Success!
Our sincere thanks to everyone who made the GATS Pongal Special Pattimandram a joyful and laughter-filled celebration.
Due to the snowstorm, the event had to be postponed and could only be scheduled on a weekday, as our special guests Mr. Raja and Mr. Bharathi Baskar were available only on that day. The Pongal Special Pattimandram was successfully held on Tuesday, February 3, at Reflections Hall, Cumming, which has a seating capacity of 300. Within just a few hours of announcement, all seats were fully registered. The overwhelming response for a weekday event clearly reflects the success of this program.
Although we had to limit attendance due to the hall’s seating capacity, your understanding and kind cooperation helped make this event smooth and memorable.
On the event day, the 2026 Pongal Special Pattimandram began beautifully under the moderation of Mr. Raja, who delivered the opening remarks and introduced the speakers. The debate topic, “Is technology increasing or decreasing happiness in families?”, led to engaging and meaningful discussions. All our Atlanta speakers presented their views confidently and thoughtfully.
We were especially proud of the next-generation participants, Shreya and Ashna, whose confident stage presence and eloquent speech impressed the audience as well as our special guests. The event continued for more than two and a half hours with insightful arguments, humor, and thought-provoking points.
Despite the unexpected changes and the shift to a weekday, it was only because of your cooperation and support that we were able to organize such a successful and fulfilling event within a short time.
At this time, we would like to extend our sincere thanks to all our generous sponsors who supported this event:
Sponsors:
Integrated (Title Sponsor), Venkat Samynathan, Tanishq USA, Sikal Adhipathi and Rowles LLC, Octave, Onsite IT Advisors and Belly Button, Talent AV Productions (JIJO), Nare and Aish, Come to Chutney, Girish Modi, Reflections Event Space
We also extend our heartfelt thanks to Reflections Event Space for providing the venue at a discounted rate on short notice and supporting us in making this event possible.
Your participation made this Pongal truly unforgettable for everyone. Once again, Greater Atlanta Tamil Sangam extends its sincere gratitude to all of you.
Thank you, Atlanta community!
Phots Link: https://tinyurl.com/PonalPattimandram2026Photos
நன்றி,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
Greater Atlanta Tamil Sangam 2026






