GATS இளைஞர் குழு அறிமுகக் கூட்டம் 2026 | நன்றி நவிலல்
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் (GATS) இளைஞர் குழுவின் வாயிலாக மார்ச் 28 அன்று நடைபெற்ற இளைஞர் குழு அறிமுகக் கூட்டம் (Youth Open House) சிறப்பாக நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் எங்களது உளமார்ந்த நன்றி.
இந்த நிகழ்வு, குழந்தைகளும் பெற்றோர்களும் ஒருவரையொருவர் சந்தித்து உறவுகளை வலுப்படுத்தவும், தங்களது கேள்விகள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றும் புதிய வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும் ஓர் அரிய தளமாக அமைந்தது.
இந்நிகழ்வில், 2026 ஆம் ஆண்டிற்கான இளைஞர் குழு தொடர்பாளர்கள் திருமிகு சரண்யா, செல்வன் ஜீவன், திருமிகு பிரேம்குமார் ஆகியோர், இளைஞர் குழு முன்னெடுத்து வரும் பல்வேறு முக்கியத் திட்டங்களை விரிவாக அறிமுகப்படுத்தினர்.
* கல்விப் பயிற்சித் திட்டம் (Tutoring Program)
* கோடைகாலத் தீவிரப் பயிற்சி முகாம் (Summer Boot Camp)
* ‘சாலை தத்தெடுப்பு’ திட்டம் (Adopt-a-Road)
* MedShare தன்னார்வலர் சேவை
* தலைமைத்துவ வளர்ச்சி முயற்சிகள் (Leadership Development Programs)
இந்த முயற்சிகள் அனைத்தும், இளைஞர்களுக்குப் பொறுப்புணர்வை வளர்த்தல், சமூகச் சேவையில் ஈடுபடுத்தல் மற்றும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் செயல்படுகின்றன.
மேலும், நமது அடுத்தத் தலைமுறை மாணவர்கள் ஆஷ்னா தனசேகர் ஜான்சிராணி, ஹன்சினி பிரேம்குமார், மாதவக் கிருஷ்ணா, ஷ்ரியா சுந்தரம் ஆகியோர் தங்கள்
பட்டறிவையும் பயணங்களையும் தன்னம்பிக்கையுடன் பகிர்ந்து கொண்டு அனைவரையும் ஊக்குவித்தனர். அவர்களுக்கு இளைஞர் குழுவின் இதயம் கனிந்த அன்பும் நன்றியும்.
அதேபோல், GATS இன் முன்னாள் தலைவர் மற்றும் இளைஞர் குழுவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் திருமிகு கிருத்திகா பாரதி அவர்கள், இளைஞர் குழுவின் செயல்பாடுகள் மற்றும் கல்விப் பயிற்சித் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.
இந்த அறிமுகக் கூட்டம், புதிய இளைஞர்கள் இணைவதற்கும், சமூகப் பணிகளில் தங்களைச் செயல்படுத்திக் கொள்ளவும், சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கவும் ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமைந்தது.
நமது அடுத்தத் தலைமுறையின் வளர்ச்சிக்காக, GATS இளைஞர் குழுவுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
GATS Youth Committee Introduction Meeting (Youth Open House) | March 28, 2026 | Thank you Note
On behalf of the Greater Atlanta Tamil Sangam (GATS) Youth Committee, the Youth Open House held on March 28 was successfully completed. We extend our heartfelt thanks to all the parents and youth who participated in this event.
This gathering served as a valuable platform for children and parents to meet one another, strengthen connections, share their questions and ideas, and explore new opportunities.
During the event, the 2026 Youth Committee Coordinators Ms. Sharanya, Mr. Jeevan, and Mr. Premkumar presented in detail the various key initiatives undertaken by the Youth Committee:
• Tutoring Program
• Summer Boot Camp
• Adopt-a-Road Initiative
• MedShare Volunteer Service
• Leadership Development Programs
All these initiatives aim to instill a sense of responsibility in youth, encourage community service, and nurture future leaders.
Additionally, our next-generation students Ashna Thanasekar, Jhansirani, Hansini Premkumar, Madhav Krishna, and Shriya Sundaram confidently shared their knowledge and personal journeys, inspiring everyone present. The Youth Committee extends its heartfelt appreciation and gratitude to them.
Furthermore, former GATS President and former Youth Committee Coordinator, Ms. Krithika Bharathi, provided insights into the Youth Committee’s activities and highlighted the importance of the Tutoring Program.
This introduction meeting served as an important initiative to welcome new youth members, encourage active participation in community service, and inspire positive change within the community.
For the growth and development of our next generation, stay connected with the GATS Youth Committee.
நன்றி,
அட்லாண்டா மாநகர தமிழ் சங்கம்
Greater Atlanta Tamil Sangam 2026






