சித்திரைத் திருவிழா – இளவேனில் கொண்டாட்டம் 2026 | நன்றி நவிலல்
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா –இளவேனில் கொண்டாட்டம் மகிழ்ச்சியும் பண்பாட்டுச் சிறப்பும் நிறைந்த நிகழ்வாக இனிதே நடைபெற்றது. குடும்பங்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து கலந்து கொண்ட இவ்விழா, தமிழ் மொழி, கலை, இலக்கியம் மற்றும் ஒற்றுமையின் அழகை வெளிப்படுத்தும் அரிய நிகழ்வாக அமைந்தது.
போட்டிகள்: காலை 11 மணியளவில் போட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டன. அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையில் பல்வேறு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேடப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவை சிறப்பாக இடம்பெற்றன. புகைப்படப் போட்டி மற்றும் குறுங்காணொளிகள் போட்டி முன்பே மெய்நிகரில் நடத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Competitions winners link: https://tinyurl.com/GATSCTV2026CompetitionWinners
இப்போட்டிகளில் இளம் தலைமுறையினர் தங்கள் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தியதுடன், தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் மீதான பற்றையும் அழகாக எடுத்துரைத்தனர். புகைப்படம் மற்றும் காணொளி உருவாக்கப் போட்டிகள் புதிய தலைமுறையின் கலைநயத்தை வெளிக்கொணர்ந்தன.

சுவையான உணவு: போட்டிகளுக்குப் பின்னர் அனைவருக்கும் சுவைமிகு நண்பகல் உணவு ரஜினி உணவகத்தில் இருந்து வழங்கப்பட்டது. சுவையான உணவை நேரத்தோடு மக்களுக்கு பரிமாற உதவிய உணவுக் குழுவின் தன்னார்வலர்கள் – Akbar Ali, Lavanya Katharnath, Ravi Subburaj, Gokul Rajendran மற்றும் GATS உணவுக்குழுவினர் அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறோம்.
கலை நிகழ்ச்சிகள்: நண்பகலுக்குப் பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தன. இளைஞர் இசைக்குழுவின் இனிமையான இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய நிகழ்ச்சி, குழு நடனங்கள், இன்னிசைப் பாடல்கள், தமிழரின் மரபுக் கலையான பறை நிகழ்ச்சி மற்றும் பெரியவர்களுக்கான “தமிழோடு விளையாடு” விளையாட்டு நிகழ்ச்சி ஆகியவற்றால் சிறப்புற்றது.
பெரியவர்களுக்கான “தமிழோடு விளையாடு” நிகழ்ச்சி தமிழ்ச் சொற்கள், பழமொழிகள் மற்றும் திருக்குறள் சார்ந்த கேள்விகளுடன் நடைபெற்றது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் பார்வையாளர்களின் உற்சாகக் கைத்தட்டலுடன் வரவேற்கப்பட்டது.

கலை நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக வள்ளுவம் வந்த வழி என்ற GATS இலக்கியக்குழுவின் நாடகம் திருக்குறளின் வரலாற்றை நாம் அறியும் படி மிகச்சிறப்பான நாடகமாக அமைந்தது. திருக்குறளின் வரலாறும் அதன் உயரிய கருத்துகளும் எளிமையாகவும் ஆழமாகவும் எடுத்துரைக்கப்பட்ட இந்த நாடகம், பார்வையாளர்களின் மனதில் சிறப்பான இடத்தைப் பெற்றது.
மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு நமது காலாண்டு “இளவேனில் இதழ் 2026” மின் மலர் வெளியிடப்பட்டது.
சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சி: இறுதியாக உலகத்தமிழர்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரின் இசையமைப்பில் உருவாக்கப்பட்ட “குறளிசைக் காவியம்” இசைத் தொகுப்பின் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. திருக்குறளின் உயரிய கருத்துக்களை பொருளோடு இசை வடிவில் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கில் உருவான இத்தொகுப்பு, தமிழ் இலக்கியத்தையும் இசையையும் இணைக்கும் அரிய முயற்சியாக அமைந்தது. இது விழாவின் முக்கிய சிறப்பம்சமாகவும், ஜார்ஜியாவில் வாழும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகவும் அமைந்தது.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அயராது உழைத்த தன்னார்வலர்கள், கலை நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவு வழங்கிய புரவலர்கள் அனைவருக்கும் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Event Photos: https://tinyurl.com/GATSCTV2026Photos
Our Proud Sponsors
* Integrated
* Arogya Now
* Chutneys (C2C Chutneys)
* Venkat Samynathan (Keller Williams)
* Tanishq USA
* Srirangam Restaurant
* Narendran Vellaisamy
* Reflections Event Space
* Sikal Adhipathi & Rowles LLC
* Octave Holdings and Investments
* Tejyo (Tejyo Financial Services)
Chithirai Thiruvizha – Ilavenil Kondattam 2026 | Thank you Note
The Greater Atlanta Tamil Sangam successfully hosted its Chithirai Thiruvizha – Ilavenil Kondattam 2026, making it a joyful and culturally enriching event filled with tradition, togetherness, and Tamil pride. Families, friends, and Tamil enthusiasts came together to celebrate and experience the beauty of Tamil language, arts, literature, and community spirit.
Competitions
The day began with competitions at 11:00 AM, featuring a variety of Tamil-centered events designed to engage participants of all ages. These included:
* Thirukkural Recitation Competition
* Fancy Dress Competition
* Drawing Competition
Additionally, the Photography Competition and Short Video Competition had been conducted virtually in advance.
Competition Winners Link:
https://tinyurl.com/GATSCTV2026CompetitionWinners
These competitions provided a wonderful platform for the younger generation to showcase their creativity and talents while expressing their appreciation for Tamil language and culture. The photography and short video contests especially highlighted the artistic vision of today’s youth.

Delicious Lunch
Following the competitions, a delicious lunch was served to all attendees, catered by Rajini Restaurant. At this time, we would like to express our sincere thanks to the Food Committee volunteers — Akbar Ali, Lavanya Katharnath, Ravi Subburaj, Gokul Rajendran, and all GATS Food Committee members — for helping serve delicious food to the attendees in a timely manner.
Cultural Performances
The afternoon cultural programs added great vibrancy and energy to the celebration. The performances began with a melodious presentation by the Youth Music Band, followed by lively group dance performances, musical renditions, and a traditional Parai performance that captivated the audience. The event also featured “Tamizhodu Vilayadu,” an engaging and interactive Tamil language game for adults, which brought enthusiasm and participation from attendees.

The “Tamizhodu Vilayadu” segment featured engaging questions on Tamil vocabulary, proverbs, and Thirukkural, creating an enjoyable and educational experience for participants. Every performance was met with enthusiastic applause from the audience.
A major highlight of the cultural program was the literary group’s drama, “Valluvam Vandha Vazhi”, presented by the GATS Literary Team. The play beautifully portrayed the history and significance of the Thirukkural, delivering its timeless values in a simple yet profound manner. It left a lasting impression on the audience.
We were also delighted to relaunch our quarterly digital magazine, “Ilavenil Malar 2026″.
Special Guest Feature
The grand finale of the event was the release of the music album “Kuralisai Kaaviyam,” composed by Lydian Nadhaswaram and Amirthavarshini.

This remarkable musical project brings the profound wisdom of the Thirukkural to audiences worldwide through meaningful musical compositions. By blending Tamil literature with music, it stands as a unique and inspiring artistic contribution. The album launch was a proud and memorable moment for the Tamil community in Georgia.
We extend our sincere gratitude to all the volunteers, cultural performers, competition coordinators, members, and sponsors whose dedication and support made this event a grand success.
Event Photos
https://tinyurl.com/GATSCTV2026Photos
Our Proud Sponsors
Integrated
Arogya Now
Chutneys (C2C Chutneys)
Venkat Samynathan (Keller Williams)
Tanishq USA
Srirangam Restaurant
Narendran Vellaisamy
Reflections Event Space
Sikal Adhipathi & Rowles LLC
Octave Holdings and Investments
Tejyo (Tejyo Financial Services)
நன்றி,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் 2026
Greater Atlanta Tamil Sangam 2026






