GATS – பொங்கல் சிறப்பு விருந்தினர்கள் திரு.பட்டிமன்றம் ராஜா மற்றும் திருமதி பாரதிபாஸ்கர் அவர்களுடன் ஒரு சந்திப்பு
அவர்களுடனான சந்திப்பு நிகழ்வின் நன்றி நவில்தல்!
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. (௭௱௰௭ – 717)
2026 ஆம் ஆண்டின் நமது தமிழ்ச் சங்கத்தின் முதல் நிகழ்ச்சியான பொங்கல் சிறப்பு விருந்தினர்களின் சந்திப்பு ஜான்ஸ் க்ரீக் பகுதியில் உள்ள ஆச்சி உணவக வளாகத்தில், கடந்த வியாழக்கிழமை 28ஆம் தேதி மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெற்றது.
இந்த சந்திப்பு நிகழ்வில், மதிப்பிற்குரிய சிறப்பு விருந்தினர்கள் பட்டி மன்றம் புகழ் திரு. ராஜா மற்றும் திருமிகு பாரதி பாஸ்கர் ஆகியோரை வரவேற்க நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன்பே , மக்கள் நீங்கள் ஆர்வத்துடன் சொன்ன நேரத்திற்கு வருகை தந்ததால், அரங்கம் முழுவதும் உற்சாகம் நிறைந்தது. மேலும் வந்திருந்த உறுப்பினர்கள் அனைவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதும், திரு.சிவா, திரு.சஜ்ஜயன், திரு. கணேஷ் ஆகியோரின் இனிமையான பாடல்களும், திரு. செந்தில் மதிவாணன் வழங்கிய பலக் குரல் நகைச்சுவை நிகழ்வும் நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பைக் கூட்டின என்று சொன்னால் அது மிகையாகாது.
இதனைத் தொடர்ந்து நமது சிறப்பு விருந்தினர்கள் வழங்கிய அறிவுரைகள், நகைச்சுவை, பட்டறிவுப் பகிர்வுகள் அனைவருக்கும் உள்ளநிறைவை அளித்தன. இறுதியில் நடைபெற்ற வினா விடை அமர்வு நிகழ்ச்சிக்கு ஒரு அழகான நிறைவைச் சேர்த்தது.
செவிக்கு உணவுண்டு காத்திருந்த நமது மக்களுக்கு, ஆச்சி உணவகம் வழங்கிய சுவைமிகு சைவ, அசைவ விருந்து அவர்களின் வயிற்றையும் நிறைத்தது.
10,000 மைல் பயணத்திற்குப் பிறகும், நேர மாற்றம் இருந்தபோதும் தங்கள் தூக்கத்தை பொருட்படுத்தாமல் எங்கள் அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த திருமிகு ராஜா மற்றும் திருமிகு பாரதி பாஸ்கர் அவர்களுக்கு GATS வாயிலாக எங்கள் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிகழ்விற்கான இடம் மற்றும் சுவையான உணவை வழங்கிய ஆச்சி உணவகக் குழுவிற்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள்கொடையாளர்கள், குறிப்பாக Integrated Solutions, வழங்கிய ஒத்துழைப்பிற்கு GATS இன் உளமார்ந்த நன்றி.
கடைசியாக, குளிரான வானிலையையும், வார நாளையும் பொருட்படுத்தாமல் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு, உற்சாகமாக பங்கேற்ற நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் GATS சார்பில் எங்கள் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் வருகையும் ஒத்துழைப்புமே இந்த நிகழ்ச்சியை சிறக்க செய்தது. அனைவருக்கும் மீண்டும் நன்றி!
GATS 2026 – Mr. Raja and Mrs. Bharathi Bhaskar Meet and greet Thank You Message
GATS extends its heartfelt gratitude to everyone who joined us for the Meet & Greet with our esteemed chief guests Patti Mandram fame Mr. Raja and Mrs. Bharathi Bhaskar held on Thursday, the 29th, at Aachi’s Restaurant in Johns Creek (6:00 PM – 9:00 PM).
The evening was a full house, with community members arriving early both families and individuals — eager to welcome our guests. The atmosphere was lively and engaging, filled with warm introductions, soulful songs by Mr. Siva, Mr. Sajayan, and Mr. Ganesh, and an entertaining mimicry performance by Mr. Senthil Mathivanan.
Aachi’s Restaurant delighted everyone with a delicious buffet spread, while our chief guests offered a feast for the mind through their thoughtful words, humor, and wisdom. The interactive Q&A session added a memorable finishing touch to the evening.
GATS sincerely thanks our chief guests for graciously accepting our invitation and participating despite long travel, jet lag, and the challenges of a 10,000‑mile journey. We also extend our appreciation to Aachi’s Restaurant for sponsoring the event by providing the venue and serving mouth‑watering food that elevated the experience for all.
Our special thanks go to our sponsors, with a heartfelt mention of Integrated Solutions, for their continued support of GATS initiatives.
Finally, GATS expresses deep gratitude to our community members for turning out in large numbers, engaging enthusiastically in the Q&A, and braving the cold on a weekday evening. Your presence, energy, and support made the event truly special.
Photo Link : https://tinyurl.com/RajaBharathiMeetGreetPhotos26
நன்றி,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
Greater Atlanta Tamil Sangam 2026






