இதயம் பேசுகிறது – Meet Dr. Chockalingam – மருத்துவர் V. சொக்கலிங்கம் அவர்களுடன் ஒரு சந்திப்பு
இதயம் பேசுகிறது – Meet Dr. Chockalingam – மருத்துவர் V. சொக்கலிங்கம் அவர்களுடன் ஒரு சந்திப்பு
அனைவருக்கும் வணக்கம்!
நமது மக்களின் வாழ்வியல் நலனை மேம்படுத்தவும், உடல் மற்றும் மன நலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஒரு பயன்மிகு குழு அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் ‘வாழ்வியல் நலக்குழு’ ஆகும்.
நமது குழு பெருமையுடன் நடத்திய முதல் நிகழ்வான, தமிழகத்தின் முன்னணி இதய நல மருத்துவர், அறிவர், V.சொக்கலிங்கம், [M.D, D.M.(Cardio), F.S.C.C. (USA), D.Sc.] அவர்களின் “இதயம் பேசுகிறது” என்ற இதய நலத்தைக் குறித்த சிறப்பு நிகழ்ச்சி மே 8 வெள்ளிக்கிழமை அன்று, உங்களின் பெரும் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவடைந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்வின் சிறப்பான வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்:
•மருத்துவர், அறிவர் V. சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கு: _“மகிழ்ச்சியே இதயத்தின் மருந்து” _ என்ற வாழ்வியல் தத்துவத்தோடு, தங்களின் பல ஆண்டுகால மருத்துவ அனுபவங்களை எளிய முறையில் பகிர்ந்துகொண்டு, எங்கள் இதயங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டிய சிறப்புரைக்கு எங்களது கோடான கோடி நன்றிகள்.
•சிறப்பு நன்றி – Kakatiya Restaurant (நிகழ்வு ஆதரவாளர்): இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு தந்து தோள் கொடுத்த காக்கத்தியா உணவகம் நிறுவனத்திற்கு எங்களது நெஞ்சார்ந்த சிறப்பு நன்றிகள்.
•அன்பான பங்கேற்பாளர்களுக்கு: எங்களின் இந்தப் புதிய முயற்சிக்கு வரவேற்பை வழங்கி, வருகையின் மூலம் பெரும் பலம் சேர்த்த அனைத்து நல்இதயங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சியின் புகைப்படங்களைக் காண கீழ்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்:
https://tinyurl.com/GATSHealthMeet2026Photos
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் வாழ்வியல் நலக்குழுவின் வாயிலாக, இனிவரும் காலங்களிலும் உடல் நலம் மற்றும் மனநலம் குறித்த பல நல்ல நிகழ்வுகளுடன் உங்கள் அனைவரையும் சந்திப்போம்.
தொடர்ந்து இணைந்திருப்போம்!
“இதயத்தைக் காப்போம்… மகிழ்ச்சியாய் வாழ்வோம்!”

Warm Greetings,
The Greater Atlanta Tamil Sangam (GATS) is proud to have launched Vaazhviyal Nalakuzhu – a dedicated wellness initiative aimed at promoting healthy lifestyles to our community and building awareness around physical and mental well-being.
We are delighted and excited to share that our very first major event held on May 8th (Friday) – a special cardiac health awareness and an interactive session titled “Idhayam Pesukirathu” – featuring the renowned cardiologist, Prof. Dr. V. Chokkalingam [M.D., D.M.(Cardio), F.S.C.C. (USA), D.Sc.] was a resounding success, made possible through your generous and overwhelming support.
We extend our sincere gratitude to:
* Prof. Dr. V. Chokkalingam: Thank you for sharing your decades of medical wisdom in such an accessible and heartfelt manner, and for inspiring us with your guiding philosophy – “Happiness is the best medicine for the heart.”
•Special Thanks- Kakatiya Restaurants (Event Sponsor): A heartfelt thank you to Kakatiya Restaurants for stepping forward as our proud main sponsor and providing outstanding support to make this event a grand success.
•Our Wonderful Attendees: Thank you to each and every one of you for gracing us with your presence and for giving our newly launched initiative such a warm and encouraging beginning.

Click the link below to view the event photos: https://tinyurl.com/GATSHealthMeet2026Photos
On behalf of the GATS Vaazhviyal Nalakuzhu, we look forward to bringing you many more enriching health and wellness events in the months ahead.
Let us stay connected!
“Protect the Heart… Live with Joy!”
நன்றி,
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம்
Greater Atlanta Tamil Sangam 2026






