முத்தமிழ் விழா 2026
முத்தமிழான இயல், இசை, நாடகம் ஆகியவற்றின் பெருமையையும் பண்பாட்டுச் செழுமையையும் போற்றும் முத்தமிழ் விழா 2026 நிகழ்விற்கு தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
“உள்ளத்தால் பொருளியல்பை
உணர்த்தும் மொழி, இயல் என்பர்; உணர்ச்சி வேக
வெள்ளத்தால் எவ்வுயிரும் மகிழ்ந்திசைய
ஓசைநலம் விளங்க இன்பம்
கொள்ளச் செய் உரைத் திறத்தாற்
குலவு மொழி இசை என்பர்; குறித்த செய்கை
விள்ளத்தால் அதுவாகப் பயிற்று மொழி
நாடகமா விரிப்ப ராலோ”
– விபுலானந்த அடிகள்
நாள்
ஆவணி 5 (சனிக்கிழமை)
ஆகஸ்ட் 22, 2026
போட்டிகள்
காலை 10:00 மணி
கலை நிகழ்ச்சிகள்
பகல் 1:30 மணி
இடம்
Hightower Trail Middle School, Marietta
முத்தமிழின் சிறப்பைப் போற்றும் இந்நன்னாளில், அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
கூடுதல் செய்திகள் விரைவில்
தலைமுறை தாண்டியும் தமிழ் வளர்ப்போம் !







